சுரண்டை போலீசாரால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் குமுறல்
நான் 04-08-19 இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து திருநெல்வேலி மாவட்டம் பரன்குன்றாபுரத்தில் இருந்து சுரண்டையில் உள்ள அண்ணாசிலை பின்புறம் இருக்கும் மெடிக்கலில் மருந்து வாங்க சென்றேன்.
அங்கு நான் வாங்க சென்ற மருந்து இல்லை அதனால் அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள அடுத்த மெடிக்கலுக்கு புறப்பட்டேன். அருகில் தான் செல்கிறோம் என்று தலைகவசம் அணியாமல் வண்டியின் முன்பக்கம் வைத்து சென்றேன்.
செல்லும் வழியில் காவல்த்துறை துனை ஆய்வாளர் அவர்கள் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தார்கள்.
என்னை நிறுத்தி வாகன சோதனை செய்தார்கள். நானும் எனது வாகன இன்சூரன்ஸ்,RC book ,லைசென்சு கொடுத்தேன்.சரிபார்த்து விட்டு தலைகவசம் அணியவில்லை என கூறி அபாதாரம் கேட்டார்கள்.நான் நடந்தை கூறினேன்.
ஏற்கவில்லை. நானும் சரி என்று கூறி அபாதாரம் கொடுக்க முன்வந்தேன்.
அப்பொழுது காவல் துணை ஆய்வாளர் அவர்களுக்கு தெரிந்த நண்பர் இருசக்கர வாகனத்தில் இருவர் வந்தார்கள் அவர்கள் கையில் தலைகவசம் கூட இல்லை.
அவர் வாகன சோதனை கூட செய்யவில்லை மற்றும் அபாதாரமும் வசூலிக்கவில்லை. அவர்களை அனுப்பி விட்டார் காவல் துறை துணை ஆய்வாளர் அவர்கள்.
நான் சென்று அவர்களை போல் என்னையும் அனுப்புமாறு கேட்டேன். அனுப்பவில்லை.
காவல் துறை துணை ஆய்வாளரிடம் நியாயம் கேட்டேன் கிடைக்கவில்லை.
நியாயம் கேட்ட பலனாக என்னை மற்றும் எனது வண்டியை காவல்நிலையத்திற்கு வலுகட்டாயமாக தூக்கி சென்றார்கள்.
காவல்நிலையத்தில் 5.30pm to 9.30pm வரை வைத்து அவதூறாக பேசி மற்றும் அடித்து
without helmet RS.100 என அபாதாரம் வசூலித்தனர் மேலும்
ஒரு பெட்டி புகார் வழக்கு பதிவு செய்வோம் என கூறி அனுப்பினர்.
தற்போது .
இன்று 14-09-19 நீதிமன்றம் வர சொல்லி காவல்நிலைய அதிகாரி தொலைபேசி மற்றும் வீட்டில் வந்து நேற்று கூறினார்கள். நீதிமன்றம் சென்றேன் அங்கு காவல்நிலைய அதிகாரி
IPL 291 section என கூறினார். மேலும் rs.500 அபாதாரம் என் காவல்நிலைய அதிகாரி கூறினார்கள்.
நான் கொடுத்துவிட்டு சென்று நீதிமன்றம் முன் நின்றேன்.
நீதிபதி ஐயா அழைத்து கேட்டார்கள். தவறு ஒப்பு கொள்கிறாயா?? என கேட்டார்கள்
நான் ஆம் என்று கூறினேன்.
அபாதாரம் rs.200 என கூறினார்கள்.
நான் காவல்நிலைய அதிகாரிடம் சென்று மீதம் rs.300 கேட்டேன்
அதன் பதில் இந்த பதிவில் உள்ளது.
குறிப்பு
இறுதி வரை
IPC 291 பிரிவு
பற்றி கூற காவல்நிலைய அதிகாரி மறுத்தார்கள்.
மேலும்
இதன் நகல் தரவில்லை.
நகல் பெற்று கொண்டேன் என கையொப்பம் போட்டால் தான் நீதிமன்றத்திற்குள் செல்ல அனுமதிப்பேன் என கூறினார்கள்.
இந்த பதில் தான் என்னை மீதி பணம் கேட்கும் போது வீடியோ எடுக்க தூண்டியது











0 comments:
Post a Comment