connect

Monday, September 30, 2019

லோதா கமிட்டி சந்திப்பு பற்றிய கலந்தாய்வு கூட்டம்

pacl tamilnadu
லோதா கமிட்டி சந்திப்பு பற்றிய கலந்தாய்வு கூட்டம்

Tuesday, September 24, 2019

செங்கோட்டையில் பிஏசிஎல் நிலம் விற்பனை அதிர்ச்சியான செய்தி

செங்கோட்டையில் பிஏசிஎல் நிலம் விற்பனை அதிர்ச்சியான செய்தி


டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பிஏசிஎல் இந்தியா லிமிடெட் இந்த நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளது.


தற்போது அந்த நிறுவனம் செபி என்ற அமைப்பால் முடக்கப்பட்டுள்ளது, 5 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க உச்ச நீதிமன்றத்தால் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி லோதா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அதன் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க சொத்துக்களை விற்பனை செய்ய அந்த குழு களத்தில் இறங்கியுள்ளது.


ஆனால் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் நடக்கவில்லை இது ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சொந்தமாக உள்ளது இந்த நிறுவனத்தில் முன்னர் வேலை செய்த பணியாளர்கள்&லோக்கல் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் இணைந்து கூட்டணியாக இந்த நிலங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக தற்போது திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த நிறுவனத்திற்கு 0.43 ஏக்கர் நிலம் இருந்தது, இது இந்த பகுதியில் யாருக்குமே தெரியாது நில மோசடி கும்பல் எப்படியோ இதை மோப்பம் பிடித்து விட்டது தற்போது கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த செங்கோட்டை இடமும் ராதாபுரம் தாலுகாவில் உள்ள திருவம்பலபுரம் என்ற இடத்தில் உள்ள பிஏசிஎல் இடமும் இணைந்து ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடந்துள்ளது இது பற்றிய ஒரு காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Monday, September 23, 2019

உடல் முழுவதும் வெடிகுண்டுகள் பெட்ரோல் தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

நெய்வேலியில் மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி,  கழுத்தில் நாட்டு வெடிகுண்டுடனுமும்,  உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்ள போன வாலிபரை உயிரை பணயம் வைத்து மீட்ட முதன்மை காவலர்.

கடலூர்;
நெய்வேலி நகரத்தில்  வடட்ம் 25 உள்ள தனது  மாமியார் வீட்டின் முன்பு மணிகண்டன் என்பவர் கழுத்தில் நாட்டு வெடிகுண்டை சுற்றிக்கொண்டு, கையில் பெட்ரோல் கேனுடன்,  தனது மனைவியை தன்னிடம் சேர்த்து வைக்க கோரி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.  இதனை பார்த்த மணிகண்டனின் மாமியார் தெருவில் வந்து கூச்சலிட்டு உள்ளார். அப்போது  அவ்வழியாக வந்த நெய்வேலி நகர முதன்மை காவலர் பாலச்சந்திரன் கூச்சலிட்ட பெண்ணிடம் விசாரித்து, வீட்டினுள் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார்.  வீட்டினுள் சக்தி வாய்ந்த வெடிகுண்டையை, தனது கழுத்தில் சுற்றி கொண்டு, உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தீப்பெட்டியை பற்ற வைக்க முயற்சித்துள்ளார் . முதன்மை காவலர் பாலச்சந்திரன் உயிரை பணயம் வைத்து, சூசமாக பேசி தற்கொலை செய்து கொள்ளாமல் பல மணி நேரமாக தடுத்து கொண்டிருந்தார். ஆனால் மணிக்கண்டன் விடாப்பிடியாக தற்கொலை செய்து கொள்ள போவதாக, கூறிக் கொண்டு இருந்ததால், பொதுமக்கள் பயத்தில் யாரும் செல்லவில்லை. தனது மனைவியை தன்னிடம் சேர்த்து வைக்குமாறு கூறி கொண்டு இருந்தார்.  இந்நிலையில் விபரீதத்தை உணர்ந்த  காவலர் பாலச்சந்திரன் நெய்வேலி நகரத்திற்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலைமை காவலர் சங்கர் மற்றும் காவலர் ராஜியும் சமாதன பேசி மணிகண்டனை மீட்க முயன்றனர். இறுதியில் மணிகண்டனின் இரண்டு வயது குழந்தையை தூக்கி கொண்டு, முதன்மை காவலர் பாலச்சந்திரன் மூவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளுவோம் என்று துணிச்சலாக மணிக்கண்டனிடம் சென்றதும், அழுதப்படியே தற்கொலை முயற்சியை கைவிட்டு, குழந்தையை தூக்கியதும், அவரது உடலில் இருந்த வெடிக்குண்டுகளை அகற்றிவிட்டு, உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றினார்.

பின்னர் மணிக்கண்டன் தான் விஷம் அருந்தியதாக கூறியதால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரை மீட்டு நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

உயிரை பணயம் வைத்து மணிகண்டனை காப்பாற்றிய முதன்மை காவலர் பாலச்சந்திரனுக்கு பொது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டு குவிந்து வருகிறது.

#வாழ்த்துக்கள்_பாலா

Saturday, September 21, 2019

PACL திருநெல்வேலி மாவட்ட லெட்சுமியூர் பண்ணை முறைகேடாக விற்பனை

பிஏசிஎல் நிலம் முறைகேடாக விற்பனை



டெல்லியை தலைமையிடமாக கொண்ட பிஏசிஎல் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன இவை அனைத்தும் பொது மக்களிடமிருந்து வசூல் செய்த டெபாசிட் பணத்தில் வாங்கிய இடங்களாகும் 2014 செபி கொடுத்த ஒரு உத்தரவினால் இந்நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி லோதா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்து பொது மக்களின் டெபாசிட் பணத்தை திருப்பி அளிப்பதற்காக ஆனால் பொதுமக்களின் பணத்தை திருப்பி அளிக்க எந்த விதமான பெரிய முயற்சியும் எடுக்கப்படவில்லை பிஏசிஎல் நிறுவனமானது தன்னுடைய பேரிலும் தன்னுடைய துணை நிறுவனங்கள் பேரிலும் தங்கள் அலுவலகத்தில் வேலை செய்த நிர்வாகிகள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்து வைத்துள்ளார்கள்.
தற்போது நிறுவனம் முடக்கப்பட்டுள்ள காரணத்தால் நிறுவனத்தில் வேலை செய்த பணியாளர்கள் தங்கள் பெயரில் இருந்த சொத்துக்களை தன்னிச்சையாக விற்பனை செய்து வருகிறார்கள்.
இதைத் தடுப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 இதில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் இந்நிறுவனம் பெயரில் உள்ளது அதில் ஒன்றுதான் ஆலங்குளம் தாலுகாவில் உள்ள லட்சுமியூர் விவசாய பண்ணை 101 ஏக்கர் நிலம் தற்போது இந்த இடமானது லோக்கல் ரியல் எஸ்டேட் புரோக்கர்களால் சிட்டிசன் ப்ளூ மெட்டல் என்ற கம்பெனிக்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளது இடத்தை வாங்கிய நிறுவனம் தற்போது அந்த இடத்தை சுத்தம் செய்து காம்பவுண்டு அமைத்து வருகிறது பணம் போட்டு முதலீட்டாளர்கள் இதை கண்ணீருடன் பார்த்து வருகிறார்கள்.
அது பற்றிய வீடியோ இணைப்பு இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளது

இதனை கமிட்டியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் தமிழக அரசும் உச்சநீதிமன்றமும் நினைத்தால் தற்போது இந்த பணிகளை நிறுத்த முடியும் செய்வார்களா ?? லோதா கமிட்டியின் உச்சநீதிமன்றமும் ??

Tuesday, September 17, 2019

PACL நிறுவன சொத்து முறைகேடாக ஆக்கிரமிப்பு அதிர்ச்சி வீடியோ


PACL நிறுவன சொத்து முறைகேடாக ஆக்கிரமிப்பு அதிர்ச்சி வீடியோ



திருநெல்வேலி ல் PACL நிறுவனத்தின் பிரசிடென்ட் B.K.KALIA பெயரில் உள்ள பங்களாவுடன் இணைந்த 0.17 ஏக்கர் இடத்தை 

PACL INDIA LTD, SEBI இரண்டு அமைப்புகளும் விற்பனைக்கு அனுமதி கொடுத்ததாக போலியாக லெட்டர்பேட் தயாரித்து 


அத்துமீறி உள்ளே நுழைந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சொத்து பற்றிய உண்மை நிலை......
இந்த சொத்து உச்சநீதிமன்றத்தால் PACL வாடிக்கையாளர்கள் பணத்தை திருப்பியளிக்க அமைக்கப்பட்ட லோதா கமிட்டியின்PACL சொத்துக்களின் விற்பனை சம்பந்தப்பட்ட https://www.auctionpacl.com என்ற இணையதளத்தில் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது

WELCOME TO AUCTION OF PACL PROPERTIES
All the available properties for auction is available on this website. Any one can search and view the document of these properties.
Sebi's Webpage for PACL-FAQs and Public Notices: http://www.sebi.gov.in/PACL.html
இந்த சொத்து ஆக்கிரமிப்பில் உள்ளது அதன் உள்ளே சென்று நமது குழு ஆய்வு செய்த வீடியோ இதில் இணைக்கப்பட்டுள்ளது.
நாம் விசாரணை செய்தவகையில் PACL நிறுவனத்தில் வேலை செய்த பணியாளர்கள் சிலர் இதில் ஈடுப்பட்டுள்ளது தெரியவந்தது இதனை முறைப்படி லோதா கமிட்டியில் புகாரளிக்கப்படும்.
बेईमानी से संपत्ति बेची
PACL INDIA LTD, SEBI ने तिरुनेलवेली में PACL के अध्यक्ष बी.के.काली के साथ संयुक्त उद्यम किया।
  संपत्ति https://www.auctionpacl.com की वेबसाइट पर बिक्री के लिए सूचीबद्ध है, जिसमें लोढ़ा समिति द्वारा PACL परिसंपत्तियों की बिक्री शामिल है, PACL ग्राहकों को वापस करने के लिए सुप्रीम कोर्ट द्वारा स्थापित
 यह संपत्ति कब्जे में है और उस वीडियो में शामिल है जिसकी हमारी टीम ने समीक्षा की है।
 जैसा कि हमने जांच की, यह पता चला कि PACL के कुछ कर्मचारियों को इसके लिए मुआवजा दिया गया है और औपचारिक रूप से लोढ़ा समिति को सूचित किया जाएगा।


PACL TAMILNADU
குழுவின் சமூகவலைத்தள லிங்ஸ்....
📱 YouTube https://youtu.be/dYXlnejFTkI
Watsapp Group
https://chat.whatsapp.com/39YU6D67017...
Teligram Group
https://t.me/joinchat/NV05qRQpiKehLzQ...
பேஸ்புக் பேஜ் பக்கம்
https://www.facebook.com/arumugasamygo/
ஃபேஸ்புக் லிங் குரூப்
https://www.facebook.com/groups/15832...
அனைவரும் இணைந்துகொள்ளவும்

Monday, September 16, 2019

சுரண்டை போலீசாரால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் குமுறல்

சுரண்டை போலீசாரால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் குமுறல்


நான் 04-08-19 இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து திருநெல்வேலி மாவட்டம்  பரன்குன்றாபுரத்தில் இருந்து சுரண்டையில் உள்ள அண்ணாசிலை பின்புறம் இருக்கும் மெடிக்கலில் மருந்து வாங்க சென்றேன்.
அங்கு நான் வாங்க சென்ற மருந்து இல்லை அதனால் அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள அடுத்த மெடிக்கலுக்கு புறப்பட்டேன். அருகில் தான் செல்கிறோம் என்று தலைகவசம் அணியாமல் வண்டியின் முன்பக்கம் வைத்து சென்றேன்.
செல்லும் வழியில்  காவல்த்துறை துனை ஆய்வாளர் அவர்கள்  வாகன சோதனை செய்து கொண்டு இருந்தார்கள்.
என்னை நிறுத்தி வாகன சோதனை செய்தார்கள். நானும் எனது வாகன  இன்சூரன்ஸ்,RC  book ,லைசென்சு கொடுத்தேன்.சரிபார்த்து விட்டு தலைகவசம் அணியவில்லை என கூறி அபாதாரம் கேட்டார்கள்.நான் நடந்தை கூறினேன்.
ஏற்கவில்லை. நானும் சரி என்று கூறி அபாதாரம் கொடுக்க முன்வந்தேன்.
அப்பொழுது   காவல் துணை ஆய்வாளர் அவர்களுக்கு தெரிந்த நண்பர்  இருசக்கர வாகனத்தில் இருவர் வந்தார்கள் அவர்கள் கையில் தலைகவசம் கூட இல்லை.
அவர் வாகன சோதனை கூட செய்யவில்லை மற்றும் அபாதாரமும் வசூலிக்கவில்லை. அவர்களை அனுப்பி விட்டார் காவல் துறை துணை ஆய்வாளர் அவர்கள்.
நான் சென்று அவர்களை போல் என்னையும் அனுப்புமாறு கேட்டேன். அனுப்பவில்லை.
காவல் துறை துணை ஆய்வாளரிடம் நியாயம் கேட்டேன் கிடைக்கவில்லை.
நியாயம் கேட்ட பலனாக என்னை மற்றும் எனது வண்டியை காவல்நிலையத்திற்கு வலுகட்டாயமாக தூக்கி சென்றார்கள்.
காவல்நிலையத்தில் 5.30pm to 9.30pm வரை வைத்து அவதூறாக பேசி மற்றும் அடித்து
 without helmet RS.100 என அபாதாரம் வசூலித்தனர் மேலும்
ஒரு பெட்டி புகார் வழக்கு பதிவு செய்வோம் என கூறி அனுப்பினர்.
தற்போது .
இன்று 14-09-19 நீதிமன்றம் வர சொல்லி காவல்நிலைய அதிகாரி  தொலைபேசி மற்றும் வீட்டில் வந்து  நேற்று  கூறினார்கள். நீதிமன்றம் சென்றேன் அங்கு காவல்நிலைய அதிகாரி
 IPL 291 section என கூறினார். மேலும் rs.500 அபாதாரம் என் காவல்நிலைய அதிகாரி கூறினார்கள்.
நான் கொடுத்துவிட்டு சென்று நீதிமன்றம் முன் நின்றேன்.
 நீதிபதி ஐயா அழைத்து கேட்டார்கள். தவறு ஒப்பு கொள்கிறாயா?? என கேட்டார்கள்
நான் ஆம் என்று கூறினேன்.
அபாதாரம் rs.200 என கூறினார்கள்.
நான் காவல்நிலைய அதிகாரிடம் சென்று மீதம் rs.300 கேட்டேன்
 அதன் பதில் இந்த பதிவில் உள்ளது.

குறிப்பு
     இறுதி வரை
IPC 291 பிரிவு
பற்றி கூற காவல்நிலைய அதிகாரி மறுத்தார்கள்.
மேலும்
இதன் நகல் தரவில்லை.
நகல் பெற்று கொண்டேன் என கையொப்பம் போட்டால் தான் நீதிமன்றத்திற்குள் செல்ல அனுமதிப்பேன் என கூறினார்கள்.
இந்த பதில் தான் என்னை மீதி பணம் கேட்கும் போது வீடியோ எடுக்க தூண்டியது

Sunday, September 15, 2019

பாவூர்சத்திரத்தில் தெட்சணமாறநாடார் சங்க ஆண்டு மகாசபை கூட்டம.

இன்று 15/9/19 பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற தெட்சணமாறநாடார் சங்கத்தின் ஆண்டு மகாசபை கூட்டம் நடைபெற்றது



தமிழிசையை தெலுங்கானா கவர்னராக்கிய பாரதபிரதமர் மோடிக்கு தெட்சணமாறநாடார் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது
இஸ்ரோ தலைவர் சிவன் நாடார் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Friday, September 13, 2019

ராஜபக்‌ஷே மகன் திருமணத்தில் விருந்தினராக கனிமொழி

ராஜபக்‌ஷே மகன் திருமணத்தில் விருந்தினராக கனிமொழி

மீண்டும் மீண்டும் தமிழீழ இனப்படுகொலையில் திமுகவின் பங்கை உறுதிப்படுத்தும் சம்பவங்கள்...  


2009ல் நம் சொந்தங்களான ஒன்றரை இலட்சம் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சேவை சந்தித்து வணங்கி வாழ்த்து சொல்லி பரிசளித்து விருந்துண்டனர் கனிமொழி திருமாவளவன் டி ஆர் பாலு உள்ளிட்டவர்கள்...

தற்போது மகிந்த ராஜபக்சேவின் இளைய மகன் நாமல் ராஜபக்சவின் திருமண விழாவில் கலந்து கொண்டிருக்கிறாள்...
தமிழின கொலைஞன் கருணாநிதியின் மகள் கனிமொழி!
வெட்கமாக இல்லையா இந்த ஜென்மங்களையெல்லாம் தமிழர் என்ற அடைமெழியில் அழைக்க
இதில் வேறு நாடார்.... தூ....வெட்கமாக இல்லை உங்களுக்கு.

Wednesday, September 11, 2019

முதலீட்டாளர்களுக்கு பணம் பெற்றுத்தர வைத்திருக்கும் திட்டம் என்ன ?

PACL போராட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.S.P.MANIKANDAN Sir அவர்களது உரை.


தமிழ்நாடு ஒருங்கிணைந்த PACL போராட்டகுழுவின் முதலீட்டாளர்களுக்கு பணம் பெற்றுத்தர வைத்திருக்கும் திட்டம் என்ன ?
குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.S.P.MANIKANDAN Sir அவர்களது உரை.

sebi website..
http://www.sebi.gov.in
nodalofficerpacl@sebi.gov.in
www.paclltd.com


sebi 92 page arikkai download..

https://www.google.com/url?q=https://www.sebi.gov.in/sebi_data/attachdocs/1408704987673.pdf&sa=U&ved=2ahUKEwi91oni3vHjAhVKwI8KHSJXAbMQFjAAegQIBBAB&usg=AOvVaw0Y6Yxq1sQomM_6C5ouc2VR

Monday, September 9, 2019

ஆலங்குளம் அருகே விபத்தில் கல்லூரி மாணவர்

ஆலங்குளம் அருகே விபத்தில் கல்லூரி மாணவர்பலி


அதிக CC திறன் உள்ள மோட்டார் சைக்கிள்களை கல்லூரியின் விழிம்பில் இருக்கும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள் பெற்றோர்களே வளரும் இளம் மொட்டு ஒன்று தளிரிலேயே கருகியது
😭

Sunday, September 8, 2019

பொடியனூர் விஜயவிநாயகர் சிலை தாமிரபரணி நதியில் சிறப்பாக விஜர்சனம் செய்யப்பட்டது

பொடியனூர் விஜயவிநாயகர் சிலை தாமிரபரணி நதியில் சிறப்பாக விஜர்சனம் செய்யப்பட்டது