திருச்சி மீட்டிங்கில் நடந்தது பற்றிய விளக்கம்
கடந்த மாதம் 25ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பிஎசிஎல் பிரதிநிதிகள் குழு மும்பையில் உள்ள செபி யின் தலைமை அலுவலகத்தில் கமிட்டி ஐ நேரில் சந்தித்து தங்களுடைய பிரச்சினைகள் சந்தேகங்கள் கோரிக்கை மனுக்களை கமிட்டியிடம் நேரில் சமர்ப்பித்து ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி திரும்பவந்து உள்ளது.
அதில் கூறியுள்ள கருத்துக்களை அக்டோபர் 2ஆம் தேதி திருச்சியில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அனைவருக்கும் அறிவித்தனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய தமிழகத்திலிருந்து சென்ற 11 பேர் கொண்ட குழுவினர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
குறிப்பாக
பன்னீர்செல்வம், செல்வ முத்துக்குமரன், தினகரன், சுப்ரமணியன், ஆறுமுகச்சாமி, மணிகண்டன் ஆகியோர் பேசினார்கள்
இதில் முக்கியமாக கூறப்பட்ட கருத்து என்னவென்றால் இது வரையும் லோதா கமிட்டி சந்தித்து இவ்வளவு நேரம் யாரிடமும் பேசியது இல்லை முதல் முதலாக தமிழ்நாட்டின் PACL பிரதிநிதிகள் கமிட்டியை சந்தித்து தங்களுடைய பிரச்சனைகளை நேரில் தெரிவித்து கமிட்டிக்கு புரிய வைத்தனர் முக்கியமாக அக்னாலேஜ்மென்ட் பிரச்சனை, இறந்துபோன வாடிக்கையாளர்களுக்கு வாரிசுகள் பணத்தைப் பெறுவது, அனைத்து ரசீதுகள் கேட்கக்கூடாது, ஆன்லைனில் பதிவு செய்ததில் தவறுதலான பதிவுகளுக்கு தீர்வு போன்ற அனைத்து பிரச்சினைகளும் கமிட்டியினர் முன்வைக்கப்பட்டு அனைத்தையும் கமிட்டி பரிசீலனை செய்வதாக கூறி யுள்ளது. முக்கியமாக தமிழில் கமிட்டி நேரடியாக பொது அறிவிப்பு ஒன்றை பத்திரிக்கை வாயிலாக வெளியிடுவதாக கூறி உள்ளது மேலும் அக்டோபர் 10ம் தேதி ரூபாய் 5 ஆயிரம் வரை கட்டியுள்ள முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப தருவதற்கான நடவடிக்கை தொடங்கும் என்ற தகவலையும் கூறியுள்ளது.
இதுபோன்ற அனைத்து தகவல்களும் திருச்சி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக அனைவரும் உறுதி கூறினார்கள் முடிவில் ராதாகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை கூற கருத்தரங்கு நிறைவு பெற்றது













0 comments:
Post a Comment