- PACL ஆவேசமடைந்த முதலீட்டாளர்கள் செபி அலுவலகம் முற்றுகை
கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் SEBI இந்திய பங்குச்சந்தை முதலீட்டு ஆணையம் PACL நிறுவனத்தை அதன் திட்டங்களை மேற்கொண்டு தொடரக்கூடாது வசூல் செய்த 💰 என குறிப்பிட்டு ரூ.49,100 கோடி யை 3 மாதங்களுக்குள் திருப்பியளிக்குமாறு உத்தரவிட்டது.
நிறுவனம் அதனை செயல்படுத்த தவறிய காரணத்தால் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் கீழ் ஓய்வுபெற்ற நீதிபதிR.M.LODHA தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது அதன் பின்னரும் பெரிய அளவில் முன்னேற்றமில்லாத காரணத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை செபியிடம் முறையிட்டும் செபி செவிசாய்க்காத நிலையில் 25/07/2019 அன்று காலை 10 மணி அளவில் சுமார் 15,000 பாதிக்கப்பட்ட மக்கள் சென்னை செபி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
போராட்டக்கார்ர்களுடன் செபி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை யின் பலனாக 1 மாதத்தில் கமிட்டியின் உருப்பினர்களை போராட்டக்காரர்கள் நேரடியாக சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறிய உத்தரவாத அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்
மேல் நடவடிக்கை இல்லாத பட்சத்தில் மீண்டும் போராட்டம் வேறு வடிவில் இருக்கும் என எச்சரித்து சென்றுள்ளனர்.






















0 comments:
Post a Comment